• Breaking News

    செப்.7ல் முழு சந்திரகிரகணம்: தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் பார்க்க ஏற்பாடு..... தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் தகவல்......


    செப்டம்பர் 7ந் தேதி நடைபெறும் முழு சந்திரகிரணகத்தை தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் முழு சந்திர கிரகணம் பார்ப்பதற்கான தெற்கு மண்டல பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில்  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கல்லூரி கல்வி  இணை இயக்குனர் (பணி நிறைவு) சுப்பையாபாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி, கருத்தாளர் சுந்தர்ராமன், மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், தலைவர் மதியழகன், கல்லூரி தாளாளர் ராஜ்குமார் மற்றும் ரம்யா, அய்யப்பன், ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் செப்.7;ல் நடைபெறும் சந்திரகிரணம் குறித்து பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பெர்துமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


    தொடர்ந்து, மாநில செயலாளர்  பாலகிருஷ்ணன் கூறுகையில், செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9.57 மணிக்கு ஆரம்பித்து செப்டம்பர் 8ஆம் தேதி விடியற்காலை 1:26 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செப்டம்பர் 7ம் தேதி வானியல் திருவிழாவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


    தமிழ்நாடு முழுவதும் 5000 இடங்களில் சந்திரகிரணகத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 500 இடங்களில் காண திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு இயற்கையான நிகழ்வு. இதை நாம் அனைவரும் பாதுகாப்பாக எந்தத் தீங்கும் இல்லாமல் பார்க்க இயலும். இந்த சந்திர கிரக ணத்தை நம் கண்களா லோ தொலை நோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ காண்பது முற்றிலும் பாதுகாப்பானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    No comments