பொன்னேரி: பஞ்செட்டி ஆனந்தவல்லி அகத்தீஸ்வரர் திருக்கோவில் பாலாலய சுபமுகூர்த்த விழா..... அதிமுக மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் பங்கேற்பு.....
பொன்னேரி தொகுதி பஞ்செட்டி கிராமத்தில் உள்ள ஆனந்த வல்லி அகத்தீ ஸ்வரர் திருக்கோவிலில் பாலாலய சுபமுகூர்த்த விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பழமை வாய்ந்த புகழ் அம்பிகை சமேத அகத்தீ பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி ஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் பாலாலாய சுப முகூர்த்த விழா நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, காலகர்ஷனம் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. 29ஆம் தேதி காலை 7 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பிக்கப்பட்டு 9 மணி மேல் 10:30 மணிக்குள் துலா லக்னத்தில் பாலாலய மகா கும்பாபிஷேக தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆனந்தவல்லி பஞ்செட்டி அகத்தீஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா. ராஜா ராம், குழு உறுப்பினர்கள் சாரதா, நாகராஜ், திருக்கோவில் கிராமப் மற்றும் கோவில் செயல் அலுவலர் ம.பாலாஜி பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்த பாலாலய சுபமுகர்த்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுனியம் பி.பலராமன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பஞ் செட்டி செல்வராஜ், திருவள்ளூர் மாவட்ட திமுக கிழக்கு அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெபஸ்டின், உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments