• Breaking News

    சிவகாமிபுரத்தில் ரூ.7.60 லட்சத்தில் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி..... திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார்.....


    சிவகாமிபுரத்தில் ரூ.7.60 லட்சத்தில் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டியினை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார்

    கீழப்பாவூர் பேரூராட்சி சிவகாமிபுரம் பகுதியில் பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ.7.60 இலட்சம் மதிப்பீட்டில் 60 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத்தொட்டி பணி நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சு.ராஜன்  தலைமை வகித்தார். துணைத்தலைவர் கி.ராஜசேகர் முன்னிலை வகித்தார். கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீ.பொன் செல்வன் வரவேற்றார்.

    தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ், பேரூர் செயலாளர் ஜெகதீசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரன்,.இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா,ஜேஸ்மின் யோவான், விஜிராஜன், இசக்கிமுத்து, தேவஅன்பு, முத்துசெல்விஜெகதீசன்,  மற்றும் பேரூராட்சி அனைத்து நிலை பணியாளர்கள், பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

    No comments