எனக்கு மனைவி வேண்டாம்..... கொளுந்தியா தான் வேணும்..... 7 மணி நேரமாக டவரில் ஏறி போராடிய வாலிபர்......
உத்தரபிரதேசம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த ராஜ் சக்சேனா, 2021ஆம் ஆண்டு ஒருபெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், அவர் உடல்நலக்குறைவால் அடுத்த ஆண்டு உயிரிழந்ததால், அதே வீட்டில் இருந்த அவரது சகோதரியை ராஜ் சக்சேனா மீண்டும் திருமணம் செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பெண்ணுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், தற்போது மனைவியின் மற்றொரு தங்கையை அவர் காதலிக்கத் தொடங்கியுள்ளார்.
இதைப் பற்றி தனது மனைவியிடம் நேரடியாகவே கூறிய ராஜ் சக்சேனா, “எனது கொழுந்தியாளை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள்” என வலியுறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, கடுமையாக எதிர்த்து வாக்குவாதம் செய்தார்.
மனைவியின் மறுப்பை ஏற்காமல், தனது காதலில் உறுதியுடன் இருந்த ராஜ் சக்சேனா, அமிதாப் பச்சன் நடித்த ஷோலே பட காட்சியைப் போல், கிராமத்தில் உள்ள மின்சார கோபுரத்தின் மீது ஏறினார். அங்கேயிருந்து, “எனது கொழுந்தியாளை காதலிக்கிறேன், அவளை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள்” என்று கூச்சலிட்டு போராட்டம் நடத்தினார். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக அவர் கோபுரத்தின் மீது அமர்ந்திருந்ததால், குடும்பத்தினர் அச்சத்தில் திகைத்தனர்.
இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை சமாதானப்படுத்த நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில், “உன் விருப்பம் நிறைவேறும்” என்ற உறுதி அளிக்கப்பட்ட பிறகே ராஜ் சக்சேனா கீழே இறங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது மனைவியின் தங்கையும் என்னை காதலிக்கிறார். நானும் அவரை விரும்புகிறேன். எங்களை இணைத்துவைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் குழப்பத்தில் சிக்கி உள்ளனர்.
No comments