தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகப்பட்டினம் மாவட்ட ஐந்தாவது மாநாடு - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 13, 2025

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகப்பட்டினம் மாவட்ட ஐந்தாவது மாநாடு


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகப்பட்டினம் மாவட்ட ஐந்தாவது மாநாடு இன்று ( 13.08.25 ) கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் மாவட்டத் தலைவர் ஜீ.வினோத்ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கே.சித்தார்த்தன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் டி.லதா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் துவக்கவுரையாற்றினார். 

மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ்சந்திரபோஸ் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். சிறுபான்மை நலக்குழு தலைவர் எம்.அப்துல்அஜீஸ், சிபிஐ எம் கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.சிவக்குமார், ஏ.வி.எம்.பகத்சிங், டி.அருள்தாஸ், ஏ.டி.எம்.முகேஷ் கண்ணன், பி.எம்.நன்மாறன், ஏ.லெனின், என்.எம்.பாலு ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றிட வேண்டும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை உறுதிப்படுத்த வேண்டும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே துவக்க வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், தலித் கிருஸ்தவர்களை பட்டியல் இனத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் அ.தி.அன்பழகன் மாவட்டத் தலைவராகவும், ப.சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் கே.சித்தார்த்தன் துணைத் தலைவர்களாகம், ஏ.ராஜா மாவட்டச் செயலாளராகவும், டி.லதா மற்றும் ஏ.சிவக்குமார் இணைச் செயலாளர்களாகவும், ஜீ.வினோத்ராமலிங்கம் மாவட்டப் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இரண்டு இளம் தம்பதிகளை வாழ்த்தி முன்னாள் மாநில துணைத் தலைவரும், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி பாராட்டுரை வழங்கினார். அவர் தனது உரையில் சாதி மறுப்பு திருமணங்களை, காதல் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும், அவரவர் இல்லங்களில் அவரவர் பிள்ளைகள் காதலை ஏற்க வேண்டும், காதல் திருமணங்கள் சாதி ஒழிப்பிற்கு தூண்டுகோலாக அமையும், சாதி வெறி படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறினார். நாற்பது பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர். இறுதியாக புதிய மாவட்டத் தலைவர் அ.தி.அன்பழகன் நன்றியுரையாற்றினார்.



No comments:

Post a Comment