வேற்காடு அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது...... திராளன பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்...... - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 13, 2025

வேற்காடு அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது...... திராளன பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்......


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்க்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது அண்மையில் பக்தர்கள் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட திருத்தளத்தில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தது அதனைத் தொடர்ந்து கடந்த ஆடி மாதம் 18ஆம் தேதி பந்தக் காலுடன் தொடங்கி கோ பூஜை நவகிரக பூஜை விக்னேஸ்வர பூஜை முதல் காலயாக பூஜை இரண்டாம் காலயாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்று வந்தது.

 தொடர்ந்து இறுதி நாளான இன்று மேள தாளங்கள் முழங்க பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ எல்லையம்மனுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர் அப்போது கூடிருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என முழக்கம் எழுப்பி அம்மனை வழிபட்டனர்.பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது  தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து வருகின்ற 17 ம் தேதி கூழ்வர்த்தால் நிகழ்வு நடைபெற உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment