பாவூர்சத்திரம் பகுதியில் அரசு அனுமதியின்றி முறைகேடாக இருசக்கர வாகனத்திற்கு கடன் வழங்குபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாவூர்சத்திரம் வட்டார பைனான்சியர்கள் சங்க தலைவர் ராஜசேகர், பொருளாளர் ரமேஷ், செயலாளர் சேர்மராஜா மற்றும் சங்க உறுப்பினர்கள் அசோக், முத் துக்குமரன், துரைசிங், சந்திரசேகர், பிரவின் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-
பாவூர்சத்திரம் பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு அரசு அனுமதிபெற்று கடன் வழங்கும் தொழில் செய்து வருகிறோம். இதற்கான முறையான ஆவணங்கள் மற்றும் வரியும் செலுத்தி வருகிறோம். ஆனால் இப்பகுதியில் சிலர் எந்தவொரு முறையான ஆவணமும் இன்றி, நாங்கள் கடன் வழங்கிய வாகனத்தை அடமானமாக பெற்றுகொண்டு முறைகேடான முறையில் கடன் வழங்குகின்றனர். சமீபகாலமாக இத்தொழில் பெருகி கொண்டே செல்கிறது. இதனால் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களது வாழ்வாதாரத்தை தடுக்கும் இத்தகைய குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment