புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி நோக்கங்களை கருத்தில் கொண்டு திமுகவின் செயல்பாடுகளில் ஈடுபட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்று கார்த்திக் தொண்டைமானுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர். திமுகவில் கார்த்திக் தொண்டைமான் இணைந்திருப்பது, புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment