இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடி கைது - MAKKAL NERAM

Breaking

Friday, August 22, 2025

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடி கைது

 


இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (வயது 76). இவர் 2022 முதல் 2024 வரை இலங்கை அதிபராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, ரணில் விக்ரமசிங்கே தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு பணத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


குறிப்பாக, ரணிலின் மனைவி மைத்திரி 2023 செப்டம்பர் மாதம் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ரணில் விக்ரமசிங்கே அரசு பணத்தில் இங்கிலாந்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை சிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிஐடி போலீஸ் அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்கே இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பின் ரணில் விக்ரமசிங்கேவை சிஐடி போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment