திருக்குவளை அருகே ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆடி மாத பௌர்ணமி சிறப்பு மகாயாகம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Saturday, August 9, 2025

திருக்குவளை அருகே ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆடி மாத பௌர்ணமி சிறப்பு மகாயாகம் நடைபெற்றது


நாகை மாவட்டம் திருக்குவளை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஸ்ரீ நல்ல முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள்  வரிசை தட்டு எடுத்து வந்தனர். பிரம்மாண்ட யாக குண்டம் உருவாக்கப்பட்டு, அதில் பட்டு, பழ வகைகள் உள்ளிட்ட 108 யாகப் பொருட்கள் கொண்டு, நவ  ஹோமம் நடைபெற்றது.

 உலக நன்மை வேண்டி நடைபெற்ற யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை, ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆலய நிர்வாகி விஜயா குமரவேல் தலைமையில் நடைபெற்ற யாக பூஜையில் , சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்வேளூர் தாலுக்கா நிருபர்                        த.கண்ணன் 




No comments:

Post a Comment