கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், ஆவணி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சன்னிதானப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ராஜேஷ், காலில் செருப்பு அணிந்து நின்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சில பக்தர்கள் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால், சபரிமலையின் புனிதத்தை மீறியதாக ராஜேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, சபரிமலை காவல்துறையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஜித் விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில், ராஜேஷ் செருப்பு அணிந்து சன்னிதானப் பகுதியில் நின்றது உறுதியானதை அடுத்து, அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு, முகாம் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் சபரிமலை பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment