திமுக பொருளாளர்,முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார் - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 19, 2025

திமுக பொருளாளர்,முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்

 


முன்னாள் மத்திய மந்திரியும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு இன்று காலை தனது 79வது வயதில் காலமானார்.


நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.


இந்நிலையில் இறுதிச் சடங்குகள் இன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment