தென்காசி மாவட்டத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை..... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..... - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 6, 2025

தென்காசி மாவட்டத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை..... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.....


தென்காசி மாவட்டத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை  என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசியில் பேசும் போது தெரிவித்தார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசியில் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசாரப் பயணம் மேற்கொண்டார். தென்காசி மேலமாசிவீதி எம்ஜி ஆர் திடலில் அவர் பேசியதாவது:-


தென்காசி நகரமே மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதேபோல் இங்கு காணக்கூடிய மக்கள் கூட்டம் அதிமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய அறிகுறியாக தெரிகிறது. தென்காசி மாவட்டத்தை  பொருத்தவரை வேளாண்மை நிறைந்த பகுதி. விவசாயத்தை நம்பிதான் இப்பகுதி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது.


2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளான  சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு சட்டக்கல்லூரி, புதிய மருத்துவ கல்லூரி, கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக்கல் லூரி,ராமநதி-ஜம்புநதி இணைப்பு திட்டம், இரட்டைக்குளம் கால்வாய் திட்டம், புளியங்குடியில் பழங்கள் காய்கனிகளுக்கான குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தேர்தலின் போது வாக்குறுதிகளில் எதை யும் நிறைவேற்றவில்லை. எனவே, இந்த ஆட்சிக்கு நான் வழங்கும் மதிப்பெண் 10-க்கு ஜீரோதான். இந்த ஆட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை. மாநிலம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.


கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் தொல்லை நிகழாத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதிமுகவின் ஆட்சிதான் தமிழசுத்தின் பொற்கால ஆட்சியாகும் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட லேப்டாப் திட்டம் 2026இல் அதிமுக ஆட்சி அமையும்போது மீண்டும் கொண்டுவரப்படும். 4,000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் எல்லாம் மக்களை ஏமாற்றுகிற வேலை. இது, சட்டசபை தேர்தலுக்காக திமுக நடத்தும் நாடகம். மக்கள் திமுக கூட்டணியை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அதிமுக பா.ஜ.க. கூட்டணிக்குத்தான் ஏசுபோக வரவேற்பு உள்ளது.


அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் உள்ளிட்டோர் விடுத்த தொடர் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டது. அத்துடன் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிட ரூ.119 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நிறைவு பெற்று 2,3 ஆண்டுகளாகியும் இன்னும் திறக்காமல் உள்ளனர். இன்னும் 8 மாதத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர் பேசினார்.  இக்கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலர் கே.அண்ணாமலை கிருஷ்ண ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தென்காசி தெற்கு மாவட்ட பகுதிக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிர்வாகிகள், பெண்கள் ஏராளமானோர் திரண்டு நின்று மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

No comments:

Post a Comment