கும்மிடிப்பூண்டியில் பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Monday, August 18, 2025

கும்மிடிப்பூண்டியில் பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது


பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விச்சூர் சங்கர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்யூர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜோதிட ராமலிங்கம், வடக்கு மாவட்ட பொது செயலாளர் வழக்கறிஞர் ஜெ.எம் ஜெகதீஷ், கும்மிடிப்பூண்டி தொகுதி தலைவர் டேவிட் சரத், பொன்னேரி தொகுதி தலைவர் இரா சோமு ஆகியோர் வரவேற்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் ஆனந்தன் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும் புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக பெரியாரன்பன், கீனுஸ் அம்சாங் உள்ளிட்ட பலர் பங்கேற்று கட்சியின் நிலைப்பாடு, கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் கட்டமைப்புகள் குறித்து புதிய பொறுப்பாளர்களுக்கு வழிமுறைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment