சங்கரன்கோவில் நகராட்சியை மீண்டும் கைப்பற்றிய திமுக - MAKKAL NERAM

Breaking

Monday, August 18, 2025

சங்கரன்கோவில் நகராட்சியை மீண்டும் கைப்பற்றிய திமுக

 



தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் தலைவர் உமா மகேஸ்வரி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பதவி இழந்ததைத் தொடர்ந்து, தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.


பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியிலும் நடந்த தேர்தலில், திமுக சார்பில் 6-வது வார்டு உறுப்பினர் கவுசல்யா, அதிமுக சார்பில் 26-வது வார்டு உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் போட்டியிட்டனர். மொத்தம் 28 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், முன்னாள் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் திமுக உறுப்பினர் ஒருவர் வாக்களிக்கவில்லை.


வாக்குகள் எண்ணப்பட்டபோது, திமுக வேட்பாளர் கவுசல்யா 22 வாக்குகள் பெற்று பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம், நம்பிக்கையில்லா தீர்மானம் காரணமாக ஏற்பட்ட குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி விட்டு, சங்கரன்கோவில் நகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியால், மாவட்ட திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் மிளிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

No comments:

Post a Comment