திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி, காட்டாவூர், கொடூர், ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பரிக்கப்பட்டு சமுதாயம் கூடத்தில் நடைபெற்றது
இதில் பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், ஆதார் கார்டு புதுப்பித்தல், வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து அவர்களின் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.
இந்த முகாமில் மாவட்ட வேலை வாய்ப்பு துறை,வருவாய்த்துறை, காவல்துறை, மின்சார துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,தாட்கோ, உள்ளிட்ட துறைகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குணசேகரன், வட்டாட்சியர் சோமசுந்தரம், அவைத் தலைவர் பகலவன்,பொன்னேரி நகராட்சி சேர்மன் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், அன்புவாணன்,கோளூர் கதிரவன்,நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார்,பா.து.தமிழரசன், ஊராட்சி செயலர்கள் ஜெகன், ராஜேஷ்கண்ணன், கோபால், நவமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment