ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில், இந்திய தேசிய காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு வேளாளர் சமுதாய நலப்பேரவை, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.சி..கருப்பணன் மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெகே (எ) எஸ்.ஜெயக்குமார் ஆகியோரின் தலைமையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அஇஅதிமுக பொது செயலாளர் இல்லத்தில்,முன்னாள் முதல்வரும் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
குன்னத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.ஜோதிமணி(காங்கிரஸ்), பெருந்துறை வட்டார தலைவர் பி.ராவுத்குமார் (காங்கிரஸ்), பெருந்துறை வட்டார துணைத் தலைவர் எஸ்.நந்தகுமார் (காங்கிரஸ்), முன்னாள் கவுன்சிலர் எஸ் ஆர் சோமசுந்தரம் (காங்கிரஸ்), முன்னாள் கவுன்சிலர் எஸ்.எம். நடராஜன் (காங்கிரஸ்),கல்வியாளர் பிரிவு துணைத் தலைவர் எஸ் பிரேம்குமார் (காங்கிரஸ்), பத்தாவது வார்டு செயலாளர் மற்றும் B.L.A கே.சங்கர் (திமுக), மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சார்ந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.சுந்தர்ராஜ், ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் A.C.விஜய் ஆத்விக், ஈரோடு தெற்கு மாவட்ட ஐ.டி விங் நிர்வாகி தனசேகரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் என்.சவுந்தரப்பிரபு, கிளை செயலாளர் பி.சித்தேஸ்வரன், குன்னத்தூர் கே.ஆர் கோபால்சாமி ஆகியோர்களும் கொங்கு வேளாளர் சமுதாய நல பேரவையாக செயல்பட்டு வந்த அமைப்பு கலைக்கப்பட்டு அதன் அவைத் தலைவர் என்.செல்வகுமார், பொது செயலாளர் பி.ஸ்ரீனிவாச மூர்த்தி, துணை பொது செயலாளர் எஸ்.மகேஸ்வரன், பொருளாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.தனசேகரன், குன்னத்தூர் பேரூர் செயலாளர் சரண் பிரபு, மாவட்ட கழக பொருளாளர் கே பி எஸ் மணி,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கார்த்திக், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் தபரோஸ், மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் சாமிநாதன்,மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர்கள் சிதம்பரம், ராஜேஷ், பொன்முடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .
No comments:
Post a Comment