திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித் தமிழர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திறனற்ற திமுக அரசின் நான்கரை ஆண்டுகால அவல நிலையை தனது சூறாவளி சுற்றுப்பயணம் மூலம் பொது மக்களுடைய எடுத்துக் கூறி வருகிறார் இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணத்தை மேற்கோள் காட்டும் விதமாக திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் பொன்னேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இரு சக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை முன்னாள் அமைச்சர் பொன்னையன் மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
பின்னர் புதிதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு கழகத் துண்டை அணிவித்து வரவேற்றார்.அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா விவசாய பிரிவு செயலாளர் தமிழ்செல்வன் ,பானுபிரசத்,ஆறுமுகம், பொன்னேரி நகர கழக செயலாளர் செல்வகுமார் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் .
No comments:
Post a Comment