சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், விடுமுறை தினம் (சுதந்திர தினம்) என்பதால், மெட்ரோ ரெயிலில் நேற்று மட்டும் 4,06,066 பேர் பயணம் செய்துள்ளனர். இது மெட்ரோவில் ஒரு நாளில் பயணம் செய்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பு, கடந்த அக்டோபரில் சென்னையில் நடைபெற்ற விமான படை சாகச நிகழ்ச்சியை மக்கள் காண வந்தபோது, மெட்ரோவில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment