சென்னை மயிலாப்பூரில், ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்சி தலைவர் திருமாவாளவனின் கைக்கூலியாக செயல்படும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு பேசினார்.
இந்து மதம், சனாதன கோட்பாடு, ராமன் உள்ளிட்ட தலைப்புகளில் அவர் வைத்த கருத்துகள் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தவம் செய்த சம்பூகன் ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதால், ராமன் அவரைக் கொன்றார். அவர் பார்ப்பனரல்ல என்றாலும், பார்ப்பனர்களுக்காக கொலை செய்கிறார். இதேபோல ராமதாஸும் பார்ப்பனர் அல்ல, ஆனால் அவர்களுக்காக செயல்படுகிறார். இருவரும் ஒன்றுதான்” என அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்துப் பேசுகையில், “ஆணவ படுகொலைக்கு பின்னாலிருக்கும் முக்கிய காரணமே சனாதன கோட்பாடு. இது சமூகத்தில் சமத்துவத்தையும் சமூக நீதியையும் இல்லாதபடி செய்கிறது. இதனை அழிக்க வேண்டும் என்பதையே புரட்சியாளர் அம்பேத்கர் வலியுறுத்தினார். அதனால் தான் பலர் மதம் மாறுகிறார்கள்.
இந்த மதத்தில் சமத்துவமும் இல்லை, சமத்துவ நியாயமும் இல்லை. எனவே இந்து மதம் அழிக்கப்படவேண்டிய மதம்” என்று வன்மையான விமர்சனங்களை பதிவு செய்தார். அவரது இந்தக் கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
No comments:
Post a Comment