நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வாரம் வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வு, டில்லியில் சுற்றித்திரியும் அத்தனை தெரு நாய்களையும் அடுத்த எட்டு வாரத்திற்குள் பிடித்து, முறையான காப்பகம் அமைத்து பராமரிக்க உத்தரவிட்டது.
மேலும், நாய்களுக்கு கருத்தடை செய்வது, தடுப்பூசி போடுவது உள்ளிட்டவற்றை டில்லி அரசு மற்றும் மாநகராட்சி மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சிலர் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரிக்க, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த அமர்வு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவு அடைந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 22) தீர்ப்பு அளித்தது. அதன் விபரம் பின்வருமாறு:
* தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தேவையில்லை. வெறித்தனமான நாய்கள், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களை தவிர மற்ற நாய்களை விடுவிக்க வேண்டும்.
* பிடித்து செல்லப்பட்ட நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு விடுவிக்க வேண்டும். ரேபிஸ் மற்றும் தொற்றுள்ள நாய்களை காப்பகங்களை அடைக்க வேண்டும்
* தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிக்கக்கூடாது
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment