கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Friday, August 22, 2025

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


தென்காசியில் நடைபெற்ற கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் திமுக சட்டத்துறை இணை செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்று பேசினர்.


தென்காசி சிவந்தி நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி வரவேற்றார்.


திமுக சட்டத்துறை இணை செயலாளர் ரவிச்சந்திரன்,  துணை செயலாளர் ராஜாமுகமுது பங்கேற்று பேசினர். இக்கூட்டத்தில்  மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் தங்கராஜ்பாண்டியன், பிச்சையா, செயற்குழு உறுப்பினர்கள் சாமித்துரை, தமிழ்செல்வி, ரஹீம், ஒன்றிய செயலாளர்கள் ரவிசங்கர், திவான்ஒலி, மணிகண்டன், சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துகுமார், தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, நகர செயலாளர்கள் வெங்கடேசன், அப்பாஸ், பேரூர் செயலாளர்கள் முத்து, ராஜராஜன், தகவல் தொழி;ல்நுட்ப அணி அமைப்பாளர்  அழகுதமிழ்சங்கர், துணை அமைப்பாளர் கலாநிதி மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் கனிமொழி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment