பதவிக்காக கூட்டணி இல்லை...... கொள்கைக்காக தான் கூட்டணி..... சொல்கிறார் வைகோ - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 12, 2025

பதவிக்காக கூட்டணி இல்லை...... கொள்கைக்காக தான் கூட்டணி..... சொல்கிறார் வைகோ

 


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மதிமுக சார்பில் ‘மதசார்பின்மையும், கூட்டாட்சியும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:-


மதிமுக ஒருபோதும் பதவிக்காக கூட்டணி வைத்தது இல்லை. கொள்கைக்காகவே கூட்டணி வைப்போம். கூட்டாட்சி தத்துவம் மட்டும்தான் இந்தியாவை பாதுகாக்கும். மதச்சார்பின்மை தான் இந்தியாவை வளர்க்கும். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியையும் பாஜக எடுத்து வருகிறது.


மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை மறுத்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற்றுவரும் திராவிட மாடல் ஆட்சியை மற்ற மாநிலங்களும் செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment