மீஞ்சூரில் உள்ள பள்ளிகளில் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு சார்பாக போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 12, 2025

மீஞ்சூரில் உள்ள பள்ளிகளில் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு சார்பாக போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு சார்பாக மீஞ்சூரில் உள்ள பள்ளிகளில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் செயின்ட் அனீஸ் பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் மற்றும் விழிப்புணர்வு பேரணியும் பள்ளி மாணவர்களை கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் புதிய தலைமுறை அக்னி சிறகுகள் இயக்கத்தின் கோபாலகிருஷ்ணன், சமூக ஆர்வலர் யாபேஸ் மற்றும் வழக்கறிஞர் பிரபாகர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment