திருச்சி முன்னாள் மேயரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுஜாதா மாரடைப்பால் காலமானார்

 


காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவரும் திருச்சி முன்னாள் மேயருமான சுஜாதா இன்று உடல்நலக் குறைவினால் காலமானார். இவர் ப. சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.


கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக தேர்வான சுஜாதாவை மீண்டும் மேயராக நியமிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ப. சிதம்பரம் நேரடியாக வலியுறுத்தினார். அந்த அளவுக்கு திருச்சி அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்த சுஜாதா இன்று மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.இவருடைய மரணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments