மக்கள் முரசு கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Thursday, August 14, 2025

மக்கள் முரசு கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

 


மக்கள் முரசு கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் ஹார்வி ரோடு சிட்கோ வில் உள்ள பிருந்தாவன் ஓட்டலில் திருப்பூர்  மாவட்ட செயலாளர்  பாக்யராஜ்  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில இணை செயலாளர் எம் . விஸ்வநாத் பிரபு ,  மாவட்ட மகளிரணி  அமைப்பாளர் என்.பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் கட்சியின்  நிறுவனத் தலைவர் கே.எம். தேவன்  சிறப்புரையாற்றினார். அதனை ,தொடர்ந்து மாநில பொது செயலாளர்  கே.விஜய் பிரபாகரன், மாநில துணைச் செயலாளர்  டி.கே.ராஜ்குமார் ,  வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எம் . செய்யது அபுதாஹிர் ஆகியோர் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து  ஆலோசனை வழங்கினார்கள்.கட்சியில் புதிதாக உறுப்பினர்கள் இணைந்தனர். 


மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment