பெத்தநாடார்பட்டியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கிளை செயலாளர் குடும்பத்துக்கு நிதியுதவியினை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்.
கீழப்பாவூர் வடக்கு ஒன்றியம், பெத்தநாடார்பட்டி ஊராட்சி, பொட்டலூரை சேர்ந்த திமுக கிளைச்செயலாளர் ஜெயக்குமார் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. பூலாங்குளத்தில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அக்குடு;ம்பத்தினரை நேரில் அழைத்து ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
மேலும் திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். இதில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், ஒன்றிய பொறுப்பாளர்கள் பொன்செல்வன், ரமேஷ், பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணிராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment