முக்கூடல் பேரூராட்சியில் தாயுமானவர் திட்டத்தினை பேரூராட்சி துணைத்தலைவரும், திமுக பேரூர் செயலாளருமான லட்சுமணன் தொடங்கி வைத்தார்.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி. முக்கூடலில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப்பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. முக்கூடல் பேரூராட்சி துணைத்தலைவரும், பேரூர் திமுக செயலாளருமான லட்சுமணன் தலைமை வகித்து, ; முக்கூடல் பேரூர் சொக்கலால் பண்டகசாலை கடை எண் 1 ல் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள் சேகர், மணி,.முருகன், இளைஞரணி துணை அமைப்பாளர் குமார், இளைஞரணி அமைப்பாளர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment