அச்சன்புதூரில் அரசு சமூக நீதிக் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம், அச்சன்புதூரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மாணவர்கள் விடுதியை கல்லூரி மாணவர்கள் விடுதியாக செயல்பட தரம் உயர்த்தப்பட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது அந்த பணி தற்போது நிறைவடைந்து. புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் திறந்து வைத்தார். தொடர்ந்து கல்லூரி மாணவர்களுடன் மதிய அறுசுவை உணவையும் மாவட்ட ஆட்சியர் உண்டு மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன், தென்காசி தனி வட்டாட்சியர் பட்டமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி, விடுதிக்காப்பாளர் காந்தி, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சங்கர சபாபதி, ஈஸ்வரன், ராஜன், ரூபிஸ்வரன், ராதாகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர் . முடிவில் கல்லூரி முதல்வர் திரு. ராம்சங்கர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment