நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழவீடங்களூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ கருப்பாயி அம்மன் ஸ்ரீ ஐயனார் ஸ்ரீ பால முனிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோவில் 47ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று சாட்டிய குடி கடைவீதியில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இருந்து முளைப்பாறையை வைத்து ஊர் பொதுமக்கள் கும்மி அடித்து முளைப்பாரி மற்றும் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக மேல தாளங்கள் முழங்க ஊர் பொதுமக்கள் ஸ்ரீ கருப்பாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து மகா தீபா ஆராதனை மற்றும் கஞ்சிவாருத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு அன்னதானமும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன்
No comments:
Post a Comment