அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை...... கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை...... - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 20, 2025

அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை...... கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை......

 


தமிழகம் முழுவதும் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும், ஆர்வமுள்ளவர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் மீது பற்று கொண்ட தொண்டர்கள் இணையும் படியும் கட்சியின் பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர்  ரகுநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கட்சிக்கு எம்.ஜி.ஆரின். படம் பொறிக்கப்பட்ட கொடி இருந்து வருகிறது. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை கருத்திற்கொண்டு தமிழகம் முழுவதும் தற்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே ஆர்வமுள்ள ஆண், பெண்கள் மற்றும் இளைஞர், இளம்பெண்கள் மற்றும் எம்.ஜி.ஆர் மீது பற்றுக்கொண்ட அனைவரும் கட்சியில் இணைந்து பணியாற்றிட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment