பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெரிண்டோ மார்கஸ் 5 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் டெல்லி வந்த மார்கசை இந்திய அதிகாரிகள் வரவேற்றார். பின்னர், அவர் ஜனாதிபதி மாளிகை வந்தார்.
அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை மார்கஸ் சந்தித்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்கஸ் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கலாச்சாரம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. இதன்பிறகு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கும், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment