நாகப்பட்டினம் மாவட்டம் தேமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப் கே.கிருஷ்ணகுமார் உத்தரவின்படி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்.பி.பிரித்திவிராஜன் முன்னிலையில் நாகூர் நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கமும் இணைந்து கொண்டாடினர்.
இந்நிகழ்வை சி.செந்தில்குமார் சுகாதார ஆய்வாளர் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு நாகூர் நாகப்பட்டினம் லயன் சங்க தலைவர் நாகை கே.செல்வன் தலைமை தாங்கினார். தாய் சேய் நலம் பற்றி மருத்துவ அலுவலர் மருத்துவர் பி.கே ஆனந்த பிரபு விளக்கிப் பேசினார், தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி நாகூர் நாகப்பட்டினம் லயன் சங்க மாவட்ட தலைவர் மரு.பீ.ரமணன் சிறப்பாக உரையாற்றினார். லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் காத்தையன் சிறப்புரை ஆற்றினார்.
இறுதியில் லயன்ஸ் சங்க பொருளாளர் ஆர்.கோகுல்நாதன் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் பற்றிய அறிவுரைகள் மற்றும் Nutritional kit வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை பகுதி சுகாதார செவிலியர் .விஜயகுமாரி சுகாதார ஆய்வாளர்கள் சுபதீஸ்வரன் ,தேவகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர். கிராம சுகாதார செவிலியர்கள் கோகிலா, ரேவதி,திவ்யா,மற்றும் ஹரிணி, நாகலட்சுமி,சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி
No comments:
Post a Comment