ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார். அவருக்கு வயது 79. கிட்னி பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யபால் மாலிக் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்ட போது அந்த மாநிலத்தின் கவர்னராக சத்யபால் மாலிக் இருந்தார். உத்தர பிரதேச மாநிலம் பக்பத் பகுதியை சேர்ந்த சத்யபால் மாலிக் எம்.எல்.ஏ, எம்.பி உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த சத்யபால் மாலிக் 2012 ஆம் ஆண்டு அக்கட்சியில் தேசிய துணைத்தலைவராகவும் பதவி வகித்தார்.
No comments:
Post a Comment