கீழையூர் அருகே உள்ள மகிழி மற்றும் ஏர்வைகாடு பகுதியிலுள்ள கதவணை, தடுப்பணை பகுதியில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தலைமையிலான அலுவலர்கள் சாகுபடிக்கு தேவையான பாசன நீர் முழுமையாக கிடைத்துள்ளதா என திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் காவிரி கடை மழையான நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் முழுமையாக கிடைக்காமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டும், ஒரு சில இடங்களில் தூர்வாரும் பணி முழுமை பெறாததால் தண்ணீர் வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
குறிப்பாக உட்பட்ட கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம்,ஏர்வைக்காடு,கீழப்பிடாகை,மகிழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதிய தண்ணீர் இன்றி 50 நாட்கள் வயதுடைய பயிர்கள் கருகும் சூழலில் இருந்தது. இந்நிலையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சிவக்குமார் தலைமையில் தஞ்சாவூர் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் பவளகண்ணன்,வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன்,உதவி பொறியாளர் வினோத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஏர்வைக்காடு, மகிழி ஆகிய பகுதிகளில் உள்ள கதவணைகள் மற்றும் தடுப்பணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு கடைமடை வரை தண்ணீர் முழுமையாக சென்று சேர்ந்ததா எனவும் ஆய்வு செய்தனர்.
மேலும் வெள்ளையாற்றிலிருந்து பாசன வசதி பெறும் பகுதிகளுக்கு 480 கன அடி வீதம் ஏற்கனவே தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்பொழுது படிப்படியாக உயர்த்தி உச்சபட்சமாக 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக இந்தப் பகுதிக்கு தண்ணீர் சென்று சேரும் வரை பாசனத்தை ரெகுலர் செய்து தருவதாகவும் விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் பலருக்கும் பாசன நீர் பிரச்சனை என்பது வேதனை அளிக்கும் ஒன்றாக இருப்பதாகவும், ஒரு சில இடங்கள் மேடாக இருக்கும் சூழலில் தண்ணீர் பாய்வதில் சிக்கல் இருப்பதாகவும் அதிகாரிகள் அதனை கலைந்து முழுமையாக அனைத்து பகுதி இருக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூர்வாரப்படாத பல்வேறு வாய்க்கால்களில் குப்பை கூலங்கள அடைத்து தண்ணீர் வருவதில் சிக்கல் இருப்பதால் அதனை அகற்றி தர வேண்டும் எனவும் கீழப்பிடாகை கீழ்குமிழியை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன்
No comments:
Post a Comment