நாகல்குளத்தில் நடைபெற்ற முதலாம் ஆண்டு கபடி போட்டியினை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளத்தில் ரோலக்ஸ் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இப்போட்டிகளை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்து, போட்டிகளை தொடங்கி வைத்தார். கிளைச்செயலாளர் காசிபாண்டியன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி செல்லவேல் மாயவநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ஸ்டீபன் சத்தியராஜ், அன்பழகன், நிர்வாகிகள் தளபதி விஜயன், மாஸ்டர் கணேஷ், சிவன்பாண்டியன், சின்னமுருகன், அருள்பாண்டி, துரைபாண்டி, டேனியல் பிரபாகரன், முத்துப்பாண்டி, பால்அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரோலக்ஸ் கபடி குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment