ரஜினியின் ‘கூலி' திரைப்படம்..... டிக்கெட் முன்பதிவுக்கு முண்டியடித்து ஓடிய கேரள ரசிகர்கள் - MAKKAL NERAM

Breaking

Friday, August 8, 2025

ரஜினியின் ‘கூலி' திரைப்படம்..... டிக்கெட் முன்பதிவுக்கு முண்டியடித்து ஓடிய கேரள ரசிகர்கள்

 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் 'கூலி'. இந்தப் படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.


ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள 'கூலி' படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இடம் பெற்று இருப்பதாகவும் அதனால் ஏ சான்றிதழை தணிக்கை குழு அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.


ரஜினி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கேரளாவில் உள்ள தியேட்டர் ஒன்றில் தொடங்கியுள்ளது. கவுன்ட்டரில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதும் ரசிகர்கள், டிக்கெட்டை வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டு ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின்றன.

No comments:

Post a Comment