• Breaking News

    சென்னங்காரணி கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு உண்ணாமுலை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா விமரிசையாக நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த சென்னங்காரணி கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு உண்ணாமுலை உடனாகிய  அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில்  அமைந்துள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 12 காலம் வேள்வி வழிபாட்டுடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 28-ம் தேதி இறை ஆணை பெறுதல், கிராம தேவதை வழிபாடு,காப்பு அணிவித்தல்,யாகசாலை வேள்வியும், திருமுறை ஓதுதலும்,கோ பூசை,தீபத்திருமகள் திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் முதல்  நிலை வேள்வி, முத்தமிழால் முதல் கால வேள்வி தொடக்கம்,உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான இன்று செந்தமிழ் சிவ ஆகமநெறிப்படி  தவத்திரு சிவாக்கர தேசிய சுவாமிகள் தலைமையிலான சிவனடியார்கள் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள், முழங்க கோவிலை சுற்றி வளம் வந்து ராஜகோபுரத்தின் மீது ஊற்றி திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை வெகு சிறப்பாக நடத்தி வைத்தனர்.பின்னர் அங்கு கூடியிருந்த பெருந்திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனை அடுத்து  வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள அருள்மிகு உண்ணாமுலை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையாருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

     இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் ஒன்றிய செயலாளர் மூர்த்தி. இளைஞர் அணி லோகேஷ்.ஆரணி நகர செயலாளர் முத்து சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

    No comments