தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பிரச்சாரத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என என்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.இந்த நிதியுதவி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலாகவும், அவர்களின் இழப்பை ஓரளவு தணிக்கும் முயற்சியாகவும் இருக்கும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments