மைக்கேல் பாளையம் ஊராட்சியில் தார் சாலை அமைக்க அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் ,  மைக்கேல் பாளையம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1கோடியே 8 லட்சத்து 8ஆயிரம் மதிப்பீட்டில் மைக்கேல் பாளையம் முதல் ஒடைமேடு வரை தார்சாலை அமைக்க அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம்  பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்  ரமேஷ் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  சரவணன் , கிளை செயலாளர்  ஜான் போஸ்கோ மற்றும் திமுக நிர்வாகிகள் , பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.



Post a Comment

0 Comments