ஈரோடு மாவட்டம் , பு.புளியம்பட்டி புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் பாலஸ்தீனத்தில் உள்ள காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்து அப்பாவி மக்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை கொன்று குவித்து வரும் இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து தமிழுரியன் தலைமையில் தமிழராசு, செங்கதிர், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பவானிசாகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் தம்பிராஜன் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் துரை, SDPI கட்சி ஈரோடு மாவட்ட செயலாளர் முகசின் காமினூன், தமிழ் புலிகள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் ரவிக்குமார், சத்தி இளைஞர் முன்னணி சக்திவேல், சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர்கள் சீதாராமன், ராமன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் செல்வன் ஆகியோர் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும்,இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்க ஏகாதிபத்திய அரசைக கண்டித்தும் விசிக,தமிழ் புலிகள் கட்சி மற்றும் SDPI கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் புன்செய் புளியம்பட்டி நகர புரட்சிகர இளைஞர் முன்னணி சுப்புதாசன் நன்றி உரையாற்றினார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments