சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (செப் 02) இந்தியா வருகிறார். அவர் 3 நாட்கள் இந்தியாவில் தங்குகிறார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் வோங் இந்தியா வருகிறார். அவர் இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவையொட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் சந்திக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.
மத்திய அமைச்சர் நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பல தலைவர்களை சிங்கப்பூர் பிரதமர் வோங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர் ராஜ்காட்டுக்கும் செல்வார். சிங்கப்பூர்-இந்தியா ராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவையொட்டி டில்லியில் நடக்க உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பிரதமர் வோங் பங்கேற்கிறார். அவர் வெளிநாட்டு சிங்கப்பூரர்களைச் சந்திக்க இருக்கிறார்.
No comments:
Post a Comment