ஈரோடு மாவட்ட எலக்ட்ரிக்கல்,பிளம்பர் டெக்னீசியன் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது


 ஈரோடு மாவட்டம் ,  ஈரோடு ரங்கம்பாளையம் இடிசியா ஹாலில் ஈரோடு மாவட்ட எலக்ட்ரிக்கல், பிளம்பர் டெக்னீசியன் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நலச்சங்கத்தின் தலைவராக பரமசிவம்  (2021 - 2027) 2021 முதல் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை என 2027 வரை 3 வது முறையாக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுக்குழு, நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தலைவரை தேர்வு செய்தனர். சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் பலர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளையும் நலசங்கத்தின் உறுப்பினர்களையும் கௌரவிக்கும் விதமாக அனைவருக்கும் சால்வை அணிவித்து அடையாள அட்டை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments