ஈரோடு மாவட்டம் , ஈரோட்டில் வேளாளர் மகளிர் கல்லூரி கஸ்தூரிபா அரங்கத்தில் தமிழன் டிவி சார்பாக ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகர் இயக்குனர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். பல துறை சார்ந்த பலதரப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டது.
ஸ்ரீ ஆறுமுக வடிவு பல் மற்றும் இம்பிளான்ட் மருத்துவமனையின் ஹரிஹரசுதன் சிறந்த பல் மருத்துவர் விருதும், சமூக ஆர்வலர் சம்பத்நகர் ரவீந்திரன் சிறந்த சமூக பற்றாளர் விருதும் , எம் எஸ் ஆடியோ பிரகாஷ்க்கு சிறந்த ஒலி ஒளி அமைப்பாளர் விருதும், சிவகலாலய பரத கலை கூடம் மாஸ்டர் விஜய்க்கு விருதும் , திரைப்பட நடிகர் இயக்குனர் பாண்டியராஜன் வேளாளர் கல்வி குழுமத்தின் தலைவர் சந்திரசேகர் பலர் முன்னிலையில் வழங்கினார்கள்.
மேலும் தமிழன் டிவி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நவீன் பிரகாஷ் , அருண் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினார்கள் பேராசிரியர் இயக்குனர் நெல்லை பாப்பையா நடுவராக கலந்து கொண்ட ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம் மிகச் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆறுமுகம் , ஆதிர ருக்குமணி , அருணாரவீந்திரன் கல்லூரி உதவி பேராசிரியை மதுரம் ஹரிஹரசுதன் , கோட்ட பொறியாளர் மின்வாரியம் ஓய்வு பெரியசாமி , ஜெகன் ராஜேந்திரன் சென்னை சரவணன் ஆடியோ பிலால் அசோக் பரதநாட்டிய கலைஞர் ஆசிரியை கலை இளமணி சங்கவி, கலாமணி மற்றும் கல்லூரி மாணவிகள், தொழிலதிபர்கள் பொதுமக்கள் 3000க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.கோரா என்டர்டைன்மென்ட் மிக சிறப்பாக விருதுகள் வழங்கினார்கள்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments