• Breaking News

    கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய பள்ளி கட்டடத்திற்கு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதியதாக ஆறாம் வகுப்பு வகுப்பறை கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.அதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ..கோவிந்தராஜன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில்  கீழ்முதலம்பேடு  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட பிரதிநிதி கே.ஜி.நமச்சிவாயம்,மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜி.சுமன் ரவி செந்தில் கழக நிர்வாகிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் பள்ளியின் மேலாண்மை குழு நிர்வாகிகள் ஆசிரியர் பெருமக்கள் பள்ளியின் மாணவ மாணவிகள் என திரளாக கலந்து கொண்டனர்.

    No comments