சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டி பிரிவு பெண்கள் கபாடி போட்டி


ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிக்கு இடையேயான டி பிரிவு பெண்கள் கபாடி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட 18 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இதில் கால் கட்ட போட்டிக்கு எட்டு கல்லூரி அணிகள் தகுதி பெற்றனர். அரை இறுதிப் போட்டிக்கு நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

 பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர் மகளிர் கலைக்கல்லூரி அணி முதலிடத்தையும்,  ஈரோடு மாவட்டம் அரச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கலை கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் ,  சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும் , ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பெற்று சிறப்பு செய்தனர். சத்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார்  தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சத்தியமங்கலம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளையும்,  சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

 முன்னதாக கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்(பொறுப்பு) வெங்கடேஷ் வரவேற்றார். இறுதியாக உடற்கல்வி துணை இயக்குனர் மாதேஷ் நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவ , மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. 9965162471 , 6382211592 .

Post a Comment

0 Comments