புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி மீனவர் வலையில் 12 அடி நீளமுள்ள ராட்சத குலுவி பாம்பு சிக்கியது. பின்னர் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே செம்பியன்மகாதேவி பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் தினேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் செந்தலைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அன்வர் ஆகிய இருவரும் குறைந்த ஆழத்தில் மீன் பிடிக்கப்படும் பட்டி வலையில் கட்டுமாவடி கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது வலையில் மீன்களுடன் சேர்ந்து 12 அடி நீளமுள்ள ராட்சத குலுவி பாம்பு சிக்கியது. இந்தப் பாம்பு விஷத்தன்மையற்றது. ஆனால் இந்த பாம்பு கடித்தால் சதையை பெயர்த்து எடுத்து விடும். உடனே இருவரும் கவனமாக இந்த பாம்பை பிடித்து மீண்டும் கடலுக்குள் விட்டனர். சாதாரணமாக இந்த வகை பாம்பு சிறிய அளவிலேயே அரிதாக வலையில் சிக்கிக் கொள்ளும். ஆனால் 12 அடி நீளமுள்ள பாம்பு சிக்குவது மிகவும் அரிது. இந்த ராட்சத பாம்பு வலையில் சிக்கிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
0 Comments