தென்காசியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 17ந் தேதி நடக்கிறது


தென்காசியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17ந் தேதி நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வருகிற 17ந்தேதி (வெள்ளிக்கிழமை) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அன்று காலை 10 முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெறும் இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான பணி யாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்ப டிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதியுடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொள் ளலாம். இதில் பங்கேற்க விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejo bs.tn.gov.in என்ற வலைதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்களும் இதே வலைதளத்தில் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments