பண்பொழி திருமலைகுமாரசாமி கோவிலில் ரூ.27 லட்சம் உண்டியல் காணிக்கை


பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ. 27.15 லட்சம் பணம், 22.400 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

தென்காசி மாவட்டம், பண்பொழியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோவிலில் உண்டியன் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் உதவி ஆணையர் கோமதி தலைமையில், அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம், அறங்காவலர் உறுப்பினர்கள் பண்பொழி இசக்கி, பாப்பா, கணேசன், குற்றாலநாதர் சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், ஆய்வாளர் சேதுராமன், தலைமை எழுத்தர் லட்சுமணன் ஆகியோரது முன்னிலையில் கோவில் உண்டியலானது திறக்கப்பட்டு, உண்டியலில் இருந்த பணம், நகைகள் உள்ளிட்டவைகள் கணக்கிடப்பட்டது.

உண்டியலில் ரூ.27 லட்சத்து 15 ஆயிரத்தி 257 ரூபாய் பணம், 22.400 கிராம் தங்கம், மற்றும் 800 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகள் இருந்த நிலையில், அதனை முறையாக கணக்கிட்டு சீல் வைத்து கோவில் வங்கி கணக்கில் அதிகாரிகள் செலுத்தினர்.

Post a Comment

0 Comments