ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள கே.எம்.எஸ் திருமண மண்டபத்தில் நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் கோபி வருவாய் வட்டாட்சியர் கவியரசு , நகர் மன்றத் துணைத் தலைவர் பி. தீபா , நகராட்சி பொறியாளர் ஆர்.தனுஷ்கோடி , நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகர சுகாதார ஆய்வாளர் பி.கே.சௌந்தர்ராஜன், நகர மாவட்ட பிரதிநிதி ஏ.சவுக்கத் அலி, நகர் மன்ற உறுப்பினர்கள் எம்.செல்வி, பி.பாலமுருகன், ஏ.மூர்த்தி, வார்டு செயலாளர்கள் எம்.வி.மதியழகன், எம்.சரவணன், நகரத் தொண்டரணி அமைப்பாளர் கே.கதிரவன், நகரப் பொறியாளர் அணி அமைப்பாளர் எஸ்.கௌதம், நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கே.முருகேசன், ராஜா (எ)மேகநாதன், ஆர்.ஜே.அருண் பிரனேஷ், அரசு துறைகளை சார்ந்த அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments